ஊராட்சி பெண் செயலர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 5, 2019

ஊராட்சி பெண் செயலர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்வு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பை ஒன்பது மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பினை அரசு பெண் ஊழியர்களுக்கு உள்ளது போன்று 180 நாள்களில் இருந்து 270 நாள்களாக உயர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.


இதற்கான பரிந்துரைக் கடிதத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார்.



அதில், அரசு பெண் ஊழியர்களில் இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக உயர்த்தப்பட்டதுஇதேபோன்று, கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் மகப்பேறு விடுப்புக்கான அளவை ஒன்பது மாதங்களாக உயர்த்தலாம்.


இதற்கான அனுமதி அளித்து அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று தனது கடிதத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கேட்டுக் கொண்டிருந்தார்.



இதைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள குழந்தைகளை வைத்துள்ள கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக உயர்த்தப்படும். இதனை மகப்பேறுக்குப் முன்போ அல்லது பின்போ எப்படி தேவைப்படுகிறதோ, அதுபோன்று எடுத்துக் கொள்ளலாம்.


 மகப்பேறு விடுப்பை நீட்டிக்க வசதியாக தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் பணி விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அதற்கான உத்தரவு தனியாக வெளியிடப்படும் என்று தனது உத்தரவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment