கூகிள் பிளேஸ்டோரில் உள்ள இந்த APP ஐ உடனடியாக நீக்குங்கள்: உங்கள் தகவல்கள் திருடப்படலாம்: எச்சரிக்கை விடுத்த கூகிள் நிறுவனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 29, 2019

கூகிள் பிளேஸ்டோரில் உள்ள இந்த APP ஐ உடனடியாக நீக்குங்கள்: உங்கள் தகவல்கள் திருடப்படலாம்: எச்சரிக்கை விடுத்த கூகிள் நிறுவனம்

கூகிள் பிளேஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகள் என்ற பட்டியலில் தற்போது கேம் ஸ்கேனர் என்ற செயலியும் இணைந்திருக்கிறது. அதனை உடனே மொபைல் போன்களில் இருந்து நீக்குமாறு  கூகிள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


கூகிள் பிளேஸ்டோரில் ஆபத்தான செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

அண்மையில் ஆபத்தான செயலிகள் என்ற பெயரில் ஏராளமான செயலிகளை வெளியிட்டு அதனை பிளேஸ்டோரில் இருந்து கூகிள் நிறுவனம் நீக்கியது.


இந்நிலையில் தற்போது கூகிள் பிளேஸ்டோரில் உள்ள கேம் ஸ்கேனர் என்ற செயலியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


உலகம் முழுவதும் கேம் ஸ்கேனர் என்ற செயலியை லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.


 கேம் ஸ்கேனர் என்ற செயலியின் மூலம் ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்து அதனுடைய ஃபார்மட்டை மாற்றி பிறருக்கு அனுப்பலாம்.

கேம் ஸ்கேனர்  செயலியில் வணிக வருவாய்க்காக  ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறும் என்றும்  இதில் உள்ள போலி விளம்பரங்கள் மூலம் மல்வார் உருவாகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 இதன் மூலம் பயணர்களின் வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள் ஹாக்கர்களால் திருடப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது


. ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் மூலம் ஸ்மார்ட் போன் வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த கூகிள் நிறுவனம், இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களை  அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment