மாநகராட்சி பள்ளியில் ராக்கெட் பயிற்சி முகாம்: மாணவர்கள் ஆர்வம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

மாநகராட்சி பள்ளியில் ராக்கெட் பயிற்சி முகாம்: மாணவர்கள் ஆர்வம்

மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் அண்மையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு என ஆங்கில பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்ட நிலையில் கோவையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ராக்கெட் அறிவியல் குறித்த பயிற்சி முகாம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.


 கோவை கிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் ராக்கெட் குறித்த ஆர்வத்தையும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பெங்களூரை சேர்ந்த ஏரோனாட்டிகள் பொறியாளர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று மாணவர்களுக்கு கற்பித்தனர்.


 இதனை தொடர்ந்து இந்த ராக்கெட் நுட்பங்கள் மாணவ, மாணவியிரிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 100 பேரில் 5 பேருக்காவது விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானிகள் குறித்த ஆர்வத்தை தூண்டுவதே தங்களுடைய நோக்கம் என பயிற்சியினர் தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளியில் இது போன்று நடத்தப்படும் வகுப்புகள் மாணவர்கள் மத்தியில் நல்ல ஆர்வத்தை ஏற்படுத்துவதாக  மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி கூறுகிறார்.


 மேலும் இது குறித்து அங்குள்ள மாணவர்கள் கூறியதாவது, இந்த பயிற்சி மையம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் விண்வெளி பற்றி தமக்கு தெரியாத பல விஷயங்களை தாங்கள் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.


 மேலும் இந்த பயிற்சி முகாம் எதிர்காலத்தில் தங்களுக்கு பயன்படும் வகையில் அமைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


 சென்னையில் மக்கள் நீதி மன்றம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி அளிக்கப்படும் நிலையில், கோவையில் ரஜினி மக்கள் மன்றம் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

No comments:

Post a Comment