அரசு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் அமைச்சரின் பெயர் சூட்ட உயர்நீதிமன்றம் பரிந்துரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

அரசு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் அமைச்சரின் பெயர் சூட்ட உயர்நீதிமன்றம் பரிந்துரை

காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக் கல்லூரிக்கு முன்னாள் அமைச்சர் கக்கன் பெயர் சூட்டலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.


 சென்னை  உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூரில் 3 ஆண்டு சட்டப்படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது.


இதை தொடர்ந்து சென்னை கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மேலும் இரண்டு சட்டக் கல்லூரிகளும் ஒரே பெயரில் செயல்படுவதால் மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுவதால் ஏதாவது ஒரு சட்டக் கல்லூரிக்கு முன்னாள் அமைச்சர் கக்கன் பெயரை வைக்கலாம் என நீதிபதிகள் பரிந்துரைத்ததுடன் தமிழக அரசே இது குறித்து முடிவு செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


 இதை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் உடற்கல்வி இயக்குநர்களை நியமித்து படிப்புடன் விளையாட்டையும் ஊக்குவித்து ஆரோக்கியமான சூழலை உருவாக்கி மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment