புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நிரப்பப்பட உள்ள Young Museum Professional பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Museum Professional
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Museology, History of Art, Indian History, Ancient Indian History போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: தொழில்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nationalmuseum.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Administrative Officer, National Museum, Janpath, New Delhi - 110 011
No comments:
Post a Comment