உரியகல்வித்தகுதி இல்லாதவர்களை பேராசிரியர்களாக நியமிக்க கூடாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

உரியகல்வித்தகுதி இல்லாதவர்களை பேராசிரியர்களாக நியமிக்க கூடாது

உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் பேராசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது' என்று, பல்கலைமானிய குழுவான,யு.ஜி.சி., கட்டுப்பாடு விதித்துள்ளது.

யு.ஜி.சி., சுற்றறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:உயர்கல்வி நிறுவனங்களில், அனைத்து மாணவர்களுக்கும், தரமான கல்வியை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.


 ஆனால், பல பல்கலைகளில் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் உள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன.


குறிப்பாக, யு.ஜி.சி., குறிப்பிட்டுள்ள கல்வி தகுதியை பெறாதவர்களை, பல கல்வி நிறுவனங்கள் பேராசிரியர் பணியில் சேர்த்துள்ளதாகவும், குறைந்த ஊதியம் காரணமாக, இந்த நியமனங்களை மேற்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.


எனவே, யு.ஜி.சி.,யின் விதிகளை, உயர்கல்வி நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment