அரசு டாக்டர்கள் விடுமுறை எடுக்க புதிய கட்டுப்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

அரசு டாக்டர்கள் விடுமுறை எடுக்க புதிய கட்டுப்பாடு

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் விடுமுறை எடுக்க புதிய கட்டுப்பாடுளை சுகாதாரத்துறை விதித்துள்ளது


. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரிகள்,அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.


இது குறித்து சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில், டாக்டர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, டாக்டர்கள் விடுப்பு எடுக்க பல்வேறு புதிய நடைமுறைகளை சுகாதாரத்துறை அமல்படுத்தவுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

டாக்டர்கள் பலர் தங்களது வார விடுமுறையன்று பணிக்கு வருகின்றனர். அதற்கு ஈடாக வார நாட்களில் விடுப்பு எடுத்து விடுகின்றனர்.


 ஒரே துறையில் உள்ள அனைத்து டாக்டர்களும் இவ்வாறு விடுமுறை எடுப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.


மேலும், மருத்துவ கல்லூரிகளில், துறை தலைவர் அனைவருக்கும் ஒரே நேரத்தில் இதுபோன்று விடுப்பு வழங்கி விடுவதால் அத்துறையின் செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படுவது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து வார விடுமுறையன்று பணிக்கு வரும் டாக்டர்கள், வார நாட்களில் மாற்று விடுமுறை எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

No comments:

Post a Comment