சாக்பீஸ், பென்சிலில் சிற்பம் செதுக்கி அசத்தும் திருச்சி பள்ளி மாணவன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

சாக்பீஸ், பென்சிலில் சிற்பம் செதுக்கி அசத்தும் திருச்சி பள்ளி மாணவன்

நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக சிற்ப கலைஞர்கள் குறைந்து வருகிறார்கள்.

சிலை செய்தவற்கு இயந்திரங்களை பயன்பாடு அதிகரித்து வரும் வேலையில், திருச்சி காஜாபேட்டையில் வசிக்கும் ஜான்பீட்டர் மகன் டேனியல்ப்ளசிங்(17)  என்பவர் மைக்ரோ ஆர்ட்டில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.


தெப்பகுளம் பிஷப்ஹீபர் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர், சின்ன வயதிலே இருந்து இசையில் ஆர்வத்துடன் காணப்பட்டார்.


 11ம் வகுப்பு படிக்கும் போது பென்சில் ஆர்ட், புல்லாங்குழல் வாசிக்கும் பழக்கங்களில் தன்னை  ஈடுபத்திக்கொண்டார். எதார்த்தமாக ஒரு நாள் யூடியூப்பில் மைக்ரோ ஆர்ட் பற்றி பார்க்க, அதில் ஈர்ப்பு ஏற்பட்டு ஆர்வம் உண்டானது.


அதில் இருந்து தொடர்ந்து மைக்ரோ ஆர்ட் பற்றி பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் பார்த்து,  அதைப்போலவே சிற்பம் செதுக்க திட்டமிட்டு பெற்றோரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் அதற்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து ஊக்குவித்தனர்.


இதனால் முதன் முதலாக கடந்த  செப்டம்பர் மாதம் சாக்பீஸில் சிலுவை செய்தார். முதன் முதலாக செய்யும் போது 10க்கும் மேற்பட்ட சாக்பீசை உடைத்துள்ளேன். முதல் சிலுவை செய்வதற்கு எனக்கு ஒரு மாதம் ஆனது.


இதில் பொறுமை மிக அவசியம். ஒன்று உடைந்து  விட்டால் மீண்டும் முயற்சி செய்து செதுக்க வேண்டும். மைக்ரோ ஆர்டில் இதயத்திற்குள் இதயம் இருப்பது மிகவும் கடினமானது. உடையாமல் மிக கஷ்டப்பட்டு செய்தேன். சாக்பீசில் முதல் முதலில் இதயம் செதுக்கும் போது 2 மணி நேரம்  ஆனது.


இப்போ 50 நிமிடத்தில் முடிக்கிறேன். இதே போல் பென்சில் முனையில் பெயர் செதுக்க குறைந்தது 2 மணி நேரம் ஆனது. இப்ப ஒரு மணி நேரத்தில் முடிக்கிறேன். இன்னும் வேகமாக பண்ணுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறேன்  என்றார்.

No comments:

Post a Comment