அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசின் சார்பில் செயல்படும் அறிவியல் நகரத்தின் மூலமாக, கல்வியாண்டு தோறும், அறிவியல் ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான அறிவியல் ஆசிரியர் விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 7ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள ஐந்து வகை பாடப்பிரிவுகளில் வகுப்பு எடுக்கும், பல்வேறு சாதனை புரிந்துள்ள ஆசிரியர்கள், 10 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழ் வழியில் கற்பிக்கும் 5 ஆசிரியர்களுக்கும், பொதுபிரிவில் 5 ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.விருது பெறும் ஆசிரியர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பாடப்பிரிவிலும், தகுதியுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக, செப்., 15ம் தேதிக்குள் மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டுமென முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளன

No comments:
Post a Comment