திருவனந்தபுரம்:
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தான் யார் என்பதையே மறைத்தும் மறந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக கண்ணன் கோபிநாத் பணிபுரிந்து வந்தவர் .
தான் வகித்து வரும் பதவியை மறைத்து சாதாரண மக்களுடன் மக்களாக நின்று நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத், தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் கண்ணன் கூறியதாவது:
குரல் இருந்தும் கொடுக்க முடியாதவர்களுக்கு, குரலாக செயல்படவே இப்பணியில் சேர்ந்தேன். ஆனால், என் சொந்த குரலையே இழந்துவிட்டேன். மக்களுக்காக நான் சுதந்திரமாக பணியில் ஈடுபட முடிவதில்லை. இதன் காரணமாகவே ராஜினாமா செய்தேன் என்றார்.
No comments:
Post a Comment