8,826 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தேர்வுக்கு தகுதியானவர்கள் ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது
. இதுகுறித்து தமிழக சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் ேநற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது
: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவிகளுக்குரிய பொதுத் தேர்வுக்கான விளம்பரத்தினை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இக்குழும இணையதளத்தில் நேற்று முதல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
. எழுத்துத் தேர்வில் கலந்துகொள்வதற்குரிய தேர்வுக்கூட ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org எனும் இணையதளத்தில் தேர்வு எழுத தகுதியானவர்கள் அவர்களின் அடையாள எண் மற்றும் ரகசிய எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் இணையதளத்தில் அடையாள எண் செலுத்தியும் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள் உதவி மைய தொலைபேசி எண்கள் 044-40016200 மற்றும் 9789035725-ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment