பிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பை தயாரித்த அரசு பள்ளி மாணவர்களை கலெக்டர் பாராட்டினர். முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களால் பத்து ஆண்டுகளாக மேலாக கற்பித்தலில் புதுமை புகுத்துதல், பள்ளி முன்னேற்றம் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தியும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தி தங்களது சொந்த முயற்சியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனால் 10 ஆண்டுகளாக இங்கு படிக்கும் மாணவர்கள் இன்ஸ்பேர் விருது மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ‘குருசேத்ரா’ உட்பட பல்வேறு விருதுகள், பல்வேறு தனியார் அமைப்புகளின் விருதுகள் பெற்றுள்ளனர்.
அதேபோல் ஆசிரியர்களின் முயற்சியில் மாணவர்களுக்கு சிறுதொழில் கை தொழில் பயிற்சி, மாணவிகளுக்கு தையல் மிஷின் வைத்து தையல் பயிற்சியும் அளித்து வருவதுடன் நெகிழியை ஒழிக்கும் வகையில் இங்குள்ள மாணவர்களுக்கு துணிப்பைகளை தயார் செய்ய ஆசிரியர்கள் கற்று கொடுத்தனர்.
அதன்படி மாணவர்கள் துணிப்பைகளை தயார் செய்வதுடன் துணிப்பையில் நீர் மேலாண்மை, நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களையும் சொந்தமாகவே அச்சிடும் முறையை (ஸ்கிரீன் பிரிண்டிங்) கற்றுக்கொண்டு தயார் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நெகிழிக்கு மாற்றாக மாணவர்களே தயாரிக்கும் துணிப்பை கண்காட்சி நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் இடம்பெற்றது.
இதில் ஆசிரியர்கள் அன்பரசு, செல்வசிதம்பரம் ஆகியோர் உதவியுடன் மாணவர்கள் ரகுராமன், யாசர் அராபத், அம்ரு, கமலேஷ் குமார் ஆகிய மாணவர்கள் நெகிழிப்பைக்கு மாற்றாக நீர் மேலாண்மை, நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களுடன் தாங்களே தயார் செய்த துணிப்பையை கலெக்டர் முன் காண்பித்து வெளியிட்டு வாசகங்களை அச்சிடும் முறையை (ஸ்கிரீன் பிரிண்டிங்) செய்து காண்பித்து விளக்கினர்.
இதனை ஆச்சரியத்துடன் பார்த்த கலெக்டர் ஆனந்த், எஸ்பி துரை ஆகியோர் மாணவர்களையும் இதற்கு உதவியாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினார்.
இந்தநிலையில் கலெக்டரால் பாராட்டப்பட்ட மாணவர்களை கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், கல்வி குழு பொறுப்பாளர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment