ரூபாய் நோட்டு வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

ரூபாய் நோட்டு வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்?

ரூபாய் நோட்டு மற்றும் காசு ஆகியவற்றின் வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பண மதிப்பை கண்டறிய முடிவதில்லை என்று தேசிய கண்பார்வையற்றவர்கள் கூட்டமைப்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


 மேலும் அவற்றில் தாங்கள் எளிதில் பயன்படுத்தும் விதமான அடையாளங்களுடன் ரூபாய் வடிவமைப்பு இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோக், என்.எம்.ஜம்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.அப்போது, ரூபாய் நோட்டு மற்றும் காசு ஆகியவற்றின் வடிவங்கள் அடிக்கடி மாற்றப்படுவதற்கான காரணம் குறித்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

உலகில் வேறு எந்த நாடும் இதுபோன்று தங்களின் ரூபாய் மற்றும் காசு ஆகியவற்றின் வடிவங்களை அடிக்கடி மாற்றுவதில்லை எனவும் தெரிவித்தார். இதுதொடர்பாக அடுத்த 6 வாரங்களுக்குள் ரிசர்வ் வங்கி பதிலளிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்பார்வையற்றவர்கள் பயன்பெறும் விதமாக அவர்களுக்கு தேவையான அடையாளங்களுடன் ரூபாய் மற்றும் காசு ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தது

No comments:

Post a Comment