ஒரே வருடத்தில் இறந்த டெல்லியின் மூன்று முதலமைச்சர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

ஒரே வருடத்தில் இறந்த டெல்லியின் மூன்று முதலமைச்சர்கள்

சுஷ்மா சுவராஜ் மறைவையடுத்து டெல்லி மாநிலம் ஒரு வருடத்தில் 3 முதல்வர்களை இழந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் மரணத்தை தொடர்ந்து ஒரு வருடத்தில் 3 முதலமைச்சர்களை இழந்து டெல்லி தவிக்கின்றது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லி மாநிலத்தின் முதல்வராக இருந்த மதன் லால் குரானா காலமானார்

இதே போல ஜூலையில் டெல்லியில் 3 முறை மாநில முதல்வராகவும் , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித் மாரடைப்பினால் காலமானார். இதையடுத்து கடந்த 1 வருடத்தில் டெல்லி மாநிலம் 3 முதல்வர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment