'நீட்' தேர்வுக்கான பயிற்சி எப்போது துவக்கம்?பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 19, 2019

'நீட்' தேர்வுக்கான பயிற்சி எப்போது துவக்கம்?பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

பள்ளி கல்வித் துறை சார்பில், அனைத்து மாணவர்களுக்கும், காலாண்டு தேர்வுக்கு பின், 'நீட்' தேர்வுக்கான பயிற்சி துவக்கப்பட உள்ளது
.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

 இலவசம்

இதற்கு தனியார் பயிற்சி மையங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, மாணவர்கள் பயிற்சி எடுக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள், தனியாரிடம் சிறப்பு பயிற்சி எடுக்க முடியவில்லை.

இதற்காக, தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், நீட் இலவச பயிற்சி திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.


 மூன்றாம் ஆண்டாக, நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட் இலவச பயிற்சி தரப்படுகிறது.


இந்த பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு, குறைந்த பட்ச அடிப்படை தகவல்கள் தெரிந்துள்ளதா என்பது குறித்து, ஆய்வு செய்ய, தகுதி தேர்வு என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.


வினாத்தாள்கள்மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, ஒரு வாரத்துக்கு முன், தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


இதில், தேர்ச்சி பெற்ற, சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும், மத்திய சிறுபான்மை அமைச்சகம் சார்பில், இரண்டு வார சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.


காலாண்டு தேர்வுக்கு பின், அனைத்து மாணவர்களுக்கும், நீட் தேர்வுக்கான பயிற்சி துவங்கப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment