குழந்தைகள் அழுதால், தொட்டிலை ஆட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்து, விவசாயி சாதனை படைத்துள்ளார்.
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே, கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், இயற்கை விவசாயி வீரமணி, 38. புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உடையவர்.
இவரது வீட்டில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில், தண்ணீர் வற்றியது. குடிக்க தண்ணீர் இல்லை என்ற நிலையில், தன் வீட்டு ஓட்டில் விழும் மழை நீரை, குழாய்கள் மூலம் எடுத்து சென்று, பாழடைந்து கிடந்த கிணற்றை சீரமைத்து, தண்ணீர் தொட்டியாக மாற்றி, சேமித்து பயன்படுத்தினார்.'
கஜா' புயலில் சாய்ந்த தென்னை மரங்களை துண்டுகளாக வெட்டி, அழகிய நாற்காலிகள் செய்துள்ளார். பழைய கலப்பை உள்ளிட்ட விவசாய கருவிகளை சேகரித்து வருகிறார்.
இவரது மனைவிக்கு, சமீபத்தில், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை இரவு, பகலாக கவனிக்க முடியாமல்,மனைவி அவதிப்படுவதைக் கண்ட வீரமணி, தொட்டிலை ஆட்டும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.பழைய இரும்பு கடைக்கு சென்று, இரண்டு, 'வைப்பர் மோட்டார்' களை வாங்கி, தொட்டிலை ஆட்டும் இயந்திரத்தை வடிவமைத்தவர், வேகத்தை கட்டுப்படுத்த, மின்விசிறி ரெகுலேட்டரையும் இணைத்தார்
குழந்தைகளுக்கு தாலாட்டு பாடவும், மெல்லிசை கேட்கவும், 'சிடி' பிளேயருடன் ஸ்பீக்கர்களை பொருத்தினார்.
மெல்லிசையுடன், இயந்திரம், தொட்டிலை ஆட்டிவிட, குழந்தைகள் நிம்மதியாக துாங்கினர்.வீரமணி கூறியதாவது:என் மனைவிக்கு, சிசேரியன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகளை துாங்க வைக்க, மனைவி பட்ட சிரமத்தை குறைக்க, இந்த இயந்திரத்தை உருவாக்கினேன். இதேபோல, என் நண்பர்களின் குழந்தைகளுக்கும் தொட்டில் செய்து கொடுத்துள்ளளேன்.இவ்வாறு, அவர் கூறினார்
செயல்படுவது எப்படி?
பஸ் , லாரியின் கண்ணாடிகளில் விழும் மழை நீரை, துடைக்கப் பயன்படும் வைப்பர் மோட்டாரில், வேகத்தை கட்டுப்படுத்த, ரெகுலேட்டரை இணைத்து, சுவிட்ச் வைக்கப்பட்டு உள்ளது.தொட்டில் கயிற்றை, வைப்பர் மோட்டாரில் உள்ள வளையத்தில் மாட்டிய பின், தொட்டிலில்குழந்தையை படுக்க வைத்து, சுவிட்சை போட்டு, தொட்டிலை மெதுவாக தள்ளி விட்டால், தொட்டில், 2 அடி வரை, முன்னும், பின்னுமாக ஆடும். ரெகுலேட்டரில் வேகத்தை அதிகப்படுத்தினால், வேகமாக தொட்டில் இயங்கும். இதை, 3,000 ரூபாயில் வீரமணி தயாரித்துள்ளார்.

No comments:
Post a Comment