காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 18, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*

19-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள்-112*

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
 எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

*பொருள்*

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே தவிர தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி மற்றும் விளக்கம்*

*ஆறு கெட நாணல் விடு, ஊரு கெட நூல விடு !*

நாம் அறிந்த விளக்கம் :

நேரடியாய் பழமொழியைப் பொருள் கொள்ளப் பார்த்தோமானால் ஆற்றை பாழாக்குவதற்கு நாணல் விட்டும் ஊரைக் கெட்டுப் போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும். ஆனால் இந்த விளக்கம் உண்மை அல்ல.

விளக்கம் :

நூல் விட்ட ஊரும் நாணலற்ற ஆற்றுக்கரையும் பழுதாய் போகும் என்பதாய் அர்த்தம் கொள்ள வேண்டும். அதாவது படிப்பறிவில்லாத அதில் ஆர்வம் காட்டாத ஊர் எந்த வித முன்னேற்றமும் அடையாது. நாணல் போன்ற தாவர வகைகள் அதிகம் அடர்ந்திருக்கும் கரைப்பகுதி பலமுள்ளதாக இருக்கும். சீக்கிரம் ஆற்றினால் அரிக்கப்பட்டு கரைகள் பாதிக்கப்படாது என்பதாய் சொல்லப்பட்ட பழமொழி முன்னுக்கு பின் மாறி மருகி இவ்விதம் வந்து விட்டது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

*Important  Words*

 Arm புஜம்

 Embryo கரு

 Eyebrow புருவம்

 Middle Finger நடு விரல்.

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

 *Using 'What do you'*

Let's continue practicing simple questions in the present. In this lesson

you'll ask simple questions using:

What do you?
When do you?
Why do you?

Listen to these examples of simple questions that use "Do you."

What do you have to buy?

When do you have to be there?

Why do you have to fix the roof?

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*காக்கா கதை*

முன் ஓர் ஊரில் ஒரு பாட்டி ஒரு மரத்தடியில் வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். ஒரு நாள், ஒரு காக்கா அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. வடையின் மணம் காக்காவின் மூக்கைத் துளைத்தது. எல்லோரும் வடையை வாங்கித் தின்றார்கள். காக்காவிற்கு வடை சாப்பிட மிகவும் ஆசை.

பாட்டியிடம் காக்கா உனக்கு உதவியாக வேலை செய்கிறேன். ஒரு வடை தருவாயா? என்று கேட்டது. பாட்டி உன்னால் எனக்கு என்ன வேலை செய்ய முடியும் என்று கேட்டார்.

அடுப்பு எரிக்கக் காய்ந்த சுள்ளிவிறகு கொண்டுவந்துக் கொடுக்கிறேன் என்றது காக்கா. பாட்டி சரி என்றார். காக்கா பறந்து சென்று காட்டில் கிடந்த விறகுக் குச்சிகளை வாயில் கவ்வி எடுத்து வந்தது. இதுபோல பல முறை சென்று விறகுக் குச்சிகளைக் குவித்தது. பாட்டி மகிழ்ந்து போனார்.

இந்தா என்று ஒரு வடையை நீட்டினார் பாட்டி. காக்கா வடையை வாயில் கவ்விக் கொண்டு அதன் கூட்டிற்கு சென்றது.

அந்தப் பக்கமாய் ஒரு நரி வந்தது. காக்கா வாயில் இருக்கும் வடையை நரி பார்த்து அந்த வடையைப் பறித்துக்கொள்ள நினைத்தது. உடனே அது காக்காவைப் புகழத் தொடங்கியது.

காக்கா! ஆகா! எத்தனை அழகு நீ! உன் ஒருச்சாய்ந்த கண்ணும், கருகரு மேனியும்... அடடா! அழகே அழகு! உன் குரலும் இனிமையாகத்தான் இருக்கும். எங்கே, உன் இனிமையான குரலில் ஒரு பாட்டுப் பாடேன் என்று இதமாய்க் கேட்டது.

புகழ்ச்சிக்கு மயங்கிய காக்காவும், வாயில் இருந்த வடையை மறந்து, கா, கா... எனப் பாடியதும் வடை கீழே விழுந்தது. நரியும் வடையைக் கவ்விக்கொண்டு ஓடியே சென்றுவிட்டது. காக்கா ஏமாந்துவிட்டது.

நீதி :
ஏமாறுபர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

*செய்திச் சுருக்கம்*

🔮கேரளா வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு.

🔮மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சிக்கான "உலகின் மிகப்பெரிய திட்டம்" தொடங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔮இலங்கை கடற்படையால்
தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு.

🔮தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்.

🔮தீபா மாலிக்குக்கு  கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு.

🔮Restrictions reimposed in parts of Srinagar after incidents of violence.

🔮Modi heads home after winding up his two-day visit to Bhutan.

🔮Uttarakhand: 20 houses washed away; 18 missing, rescue efforts underway.

🔮IAF aircraft parts recovered 51 years after crash.

🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment