வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முதுநிலை பட்டயப் படிப்புகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 11, 2019

வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முதுநிலை பட்டயப் படிப்புகள்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி, தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.



உணவு அறிவியல் - பதப்படுத்துதல், மூலிகைப் பயிர்கள் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு - சந்தைப்படுத்துதல், தேயிலைத் தோட்ட மேலாண்மை, உயிர்த் தகவலியல், உணவுத் தொழில்நுட்பம், கிராமப்புற வங்கி - நிதி, சுற்றுச்சூழல் மேலாண்மை, கரும்புத் தொழில்நுட்பங்கள், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், வணிக ரீதியில் உயிரியல் பூச்சி - நோய்க் கொல்லிகள் உற்பத்தி, அங்கக வேளாண்மை, பசுமைக்குடில் சாகுபடி, வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு போன்ற முதுநிலை பட்டயப் படிப்புகள் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படுகின்றன.


இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் பெறப்படும் என்றும் விருப்பமுள்ளவர்கள் துறையின் இயக்குநரை நேரிலோ, 0422 6611229, 94421 11048, 94421 11057 என்ற எண்கள் மூலமாகவோ, பல்கலைக்கழக இணையதளம் மூலமோ தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment