உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணி நிரவல் நியமனம் சிஇஓ ஓய்வுபெறும் நாளில் போட்ட உத்தரவு திடீர் ரத்து: பொறுப்பு சிஇஒ அதிரடி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணி நிரவல் நியமனம் சிஇஓ ஓய்வுபெறும் நாளில் போட்ட உத்தரவு திடீர் ரத்து: பொறுப்பு சிஇஒ அதிரடி அறிவிப்பு

நெல்லை முதன்மைகல்வி அலுவலர் ஓய்வு பெறும் நாளில் உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் மூலம் மாறுதலின் நியமனம் செய்து வழங்கிய செயல்முறை உத்தரவை தற்போதைய பொறுப்பு முதன்மைக்கல்வி அலுவலர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தேனி கல்வி மாவட்ட அலுலவராக பணியாற்றிய கணேஷ் பதவி உயர்வு பெற்று கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நெல்லை முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றார். 49 நாட்களே இங்கு பணியாற்றிய நிலையில் ஜூலை 31ம் தேதி  அவர் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெறும் நாளில் அவர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி மாறுதல் நியமனத்திற்கான உத்தரவு வழங்கினார்.

இதனடிப்படையில் சுமார் 25க்கும் மேற்பட்ட உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் பணியிடத்தில் இருந்து உபரி காரணம் காட்டி மற்றொறு உதவி பெறும் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


 இந்நிலையில் நெல்லை மாவட்ட பொறுப்பு முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்ற தூத்துக்குடி மாவட்டத்தின் தற்போதைய முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி கடந்த 2ம் தேதி நெல்லை வந்தார்.

அப்போது இந்த உத்தரவு விபரங்களை ஆய்வு செய்த அவர் ஓய்வுபெறும் நாளில் சிஇஒ கணேஷ் பிறப்பித்த செயல்முறைகள் உத்தரவை ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவர் பிறப்பித்த புதிய செயல்முறைகள் உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: “

திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் உபரியென கண்டறியப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை, மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ள பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் தேவையென கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் மாறுதலில் நியமனம் செய்து வழங்கப்பட்ட ஆணை, பல்வேறு நிர்வாக காரணங்களின் அடிப்படையில் தற்பொழுது ரத்து செய்யப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.முழுமையாக விசாரிக்க வேண்டும்

இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், தமிழக அளவில் அரசுப்பள்ளிகளில்கூட பணி நிரவல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பிற கலந்தாய்வு நிகழ்ச்சிகளும் நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தத்தில் உள்ளது.


49 நாட்கள் மட்டுமே பதவி உயர்வு மூலம் பணி செய்த நெல்லை சிஇஒ தனது ஓய்வு நாளில் பிறப்பித்த இந்த பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்கிய உத்தரவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  முறைகேடு நடந்துள்ளதா என உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்பார்கிறோம் என்றனர்

No comments:

Post a Comment