வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்பட கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருள் கிடையாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் உள்பட கார், ஏசி வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருள் கிடையாது

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மானியம் பெற தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


 ஆதார் கார்டின் அறிமுகத்திற்கு முன்பு வரை தனி மனிதர் அடையாளமாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்பட்டு வந்தது.


 இப்போது, அந்த ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாறியுள்ளது. இந்நிலையில் வசதி படைத்தவர்கள், மானியத்தில் பொருட்களை பெறும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் வந்தன.


இதனையடுத்து  தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில், முன்னுரிமை பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன


.  மானியம் பெற தகுதியில்லாத குடும்பங்கள் தனியாக பிரிக்கப்படுகின்றன. இக்குடும்பங்கள் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை பெறுவதற்கான ரேஷன் கார்டுகளை பயன்படுத்தினால் அது மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


ஏசி மற்றும் கார் வைத்திருக்கும் குடும்பம், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அலுவலர்கள் குடும்பம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாய குடும்பம், வருமான வரி, தொழில் வரி ெசலுத்துவோரை உறுப்பினராக கொண்ட குடும்பம், 3 அல்லது அதற்கும் மேல் அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம்,  ஒரு லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறும் குடும்பம் ஆகியவை இதுவரை மானியங்கள் பெற்று வந்தால் அது தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 அதன்படி, சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் ரேஷன் கார்டுகள் ஆய்வு ெசய்யும் பணி  நடந்து வருகிறது.

இந்த ஆய்வு பணி முடிந்ததும், அதன்  அறிக்கை, சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆய்வில், மானியம் பெற தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்ட பின் அந்த கார்டின் சலுகை ரத்து செய்யப்படும்.

தற்போது நடந்து வரும் ஆய்வு முடிந்ததும், அதன் அறிக்கை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகுதான், மானியம் பெற தகுதியில்லாத கார்டின் விவரங்கள் தெரிய வரும்,’’ என்றனர்

1 comment:

  1. This is not a good idea.we want hi-tech schools for poor chilren not a library

    ReplyDelete