அரியர்ஸ் வைத்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 17, 2019

அரியர்ஸ் வைத்த மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

அரியர்ஸ் வைத்த பாலிடெக்னிக் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:


பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட காலக்ெகடுவுக்குள் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இதற்காக அக்டோபர் மாதம், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின்கீழ் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அக்டோபர் மாதம் நடைபெறும் சிறப்புத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம். அபராதமின்றி கட்டணம் செலுத்துவதற்கான ஆகஸ்ட் 20ம் தேதி கடைசி நாளாகும்.

150 அபராதத்துடன் ஆகஸ்ட் 29ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம். 750 அபராதத்துடன் செப்டம்பர் 24ம் தேதி வரை கட்டணத்தை செலுத்தலாம்.


இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளத்தில் (www.tndte.gov.in) மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தொழில்நுட்பகல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment