வரதட்சணை உறுதிமொழி அளிக்காததற்காக எந்தவொரு ஆணுக்கும் அரசு வேலையை மறுக்கக்கூடாது: ஐகோர்ட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 2, 2019

வரதட்சணை உறுதிமொழி அளிக்காததற்காக எந்தவொரு ஆணுக்கும் அரசு வேலையை மறுக்கக்கூடாது: ஐகோர்ட்

வரதட்சணை வாங்கவில்லை என்று உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் ெசய்யாததற்காக ஒரு ஆணுக்கு அரசு வேலையை மறுக்கக்கூடாது என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீலேஷ் பசர்கர் என்பவருக்கு மும்பையில் உள்ள சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் குமஸ்தா வேலையில் சேருவதற்கான உத்தரவு கிடைத்தது.



ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் வரதட்சணை உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் ெசய்யவில்லை என்பதற்காக அவரை அலுவகத்துக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

மகாராஷ்டிரா வரதட்சணை ஒழிப்பு சட்டம் மற்றும் மகாராஷ்டிரா சிவில் சர்வீஸ் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு அரசு ஆண் ஊழியரும் மாமனார் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்று உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் அவருடைய மனைவி, மாமனார் மற்றும் சொந்த தந்தையும் கையெழுத்திட்டிருக்க வேண்டும்


. ஆனால் நீலேஷ் பசர்கர் விசயத்தில் அவருடைய மனைவி திருமணமான மூன்று மாதத்தில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதுமட்டுமின்றி குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கும் தொடர்ந்துள்ளார்.


இதைத் தொடர்ந்து உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்வதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி அதிகாரிகளிடம் நீலேஷ் பசர்கர் விண்ணப்பித்தார். ஆனால் அதிகாரிகள் அதை நிராகரித்து வேலையில் சேர அனுமதிக்கவில்லை.

இதையடுத்து நீலேஷ் பசர்கர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் அகில் குரேஷி மற்றும் ஷாருக் கதாவாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.



அப்போது மாமனார் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்று உறுதி மொழிப் பத்திரம் தாக்கல் செய்யாததற்காக எந்தவொரு ஆணுக்கும் அரசு வேலையை மறுக்ககூடாது என்று நீதிபதிகள் கூறினர்.


மனைவி உள்ளிட்டோரின் கையெழுத்துடன் கூடிய உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யத் தவறியதாலேயே அவர் வரதட்சணை வாங்கியுள்ளார் என்று கருதிவிட முடியாது.


 சில சிறப்பு காரணங்களுக்காக அவர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கலாம். இதற்காக வேலையை மறுக்கக்கூடாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment