அக்டோபர் முதல், அனைத்து பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் முழுமையாக செயல்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 17, 2019

அக்டோபர் முதல், அனைத்து பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் முழுமையாக செயல்படும்

தமிழகத்தில், 6,029 அரசு பள்ளிகளில், அக்., முதல் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்படும் வகையில், பணிகள் துரிதப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள, 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


ஒவ்வொரு உயர்நிலை பள்ளிக்கும், 10 கணினிகள் உள்பட 12 உபகரணங்களும், ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும் 20 கணினிகள் உள்பட 12 உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ''எல் அண்ட் டி நிறுவனத்தின் வாயிலாக, பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில், இன்டர்நெட் இணைப்பு பணி முடிந்துவிட்டது. அக்., முதல், அனைத்து பள்ளிகளிலும், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் முழுமையாக செயல்படும்,'' என்றார்

No comments:

Post a Comment