கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.
நீண்ட காலமாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு இனிப்பு வகைகளின் பெயர்களை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. இந்நிலையில், பழைய வழக்கத்தை மாற்றி புதிய இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு 10 என அழைப்பதாக தெரிவித்து இருக்கிறது.
இதுவரை ஆண்ட்ராய்டு கியூ என அழைக்கப்பட்ட புதிய இயங்குதளம் இனி ஆண்ட்ராய்டு 10 என அழைக்கப்பட இருக்கிறது. புதிய இயங்குதளம் முன்பை போன்று இனிப்பு வகைகளின் பெயர்களை கொண்டிருக்காது. இதற்கு மாற்றாக எண் அடிப்படையில் அழைக்கப்படும்.
ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்ட பெயர்களில் சில பெயர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் இல்லை. இதன் காரணமாகவே பெயர் சூட்டுவதில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்ட்ராய்டு லோகோ மற்றும் நிறம் முன்னதாக 2014 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் பின் தற்சமயம் கூகுள் பெயர், லோகோ உள்ளிட்டவற்றை மாற்றியிருக்கிறது.
புதிய லோகோவின் வடிவமைப்பு ஆண்ட்ராய்டு ரோபோட்டை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வரும் வாரங்களில் வெளியிடப்படுகிறது.

No comments:
Post a Comment