முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 24, 2019

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார். இவருக்கு வயது 66 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார்



. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் இன்று பிரிந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.


 அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த வாரம் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜேட்லியின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்இந்நிலையில் அருண் ஜேட்லி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அருண் ஜேட்லிக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.


இதற்கிடையே பூடான் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, அருண் ஜேட்லியை காண எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அருண் ஜேட்லி இன்று காலமானார்.

அருண் ஜெட்லியின் அரசியல் வரலாறு:

பாஜக மூத்த தலைவரான ஜேட்லி முன்னாள் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தவர்.


நிதி அமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியவர். அருண் ஜேட்லி நிதியமைச்சராக இருந்தபோது தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.


 66 வயதான அருண் ஜேட்லி வாஜ்பாய் அரசியலிலும், நரேந்திர மோடி அரசியலிலும் அமைச்சர்கள் இருந்தவர். வாஜ்பாய் ஆட்சியில் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். பாஜகவின் குழுத்தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


 நிதித்துறை, பாதுகாப்புத்துறை, சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியவர். இவர் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். டெல்லியில் கல்லூரி மாணவராக இருந்த போது அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டவர்.


இவர், 1975 -77ல் நாட்டில் அவரச நிலை பிரகனடப்படுத்தியபோது அருண் ஜெட்லி கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். 2009-2014 வரை மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவராக அருண் ஜேட்லி இருந்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்தவர்.

No comments:

Post a Comment