திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் விரத வழிபாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 25, 2019

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் விரத வழிபாடு

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்றவை தீர விரதம் இருந்து வன்னி மர வழிபாடு செய்து வர வேண்டும்.


மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு வன்னி மரத்தின்பொந்திற்குள்ளாக வைத்து விட்டு சென்றனர்.


பிறகு கௌரவர்களுடன் போர்புரியும் போது அந்த வன்னி மரத்தை வணங்கி அதிலிருந்து தங்களின் ஆயுதங்களை எடுத்துச் சென்று அவர்களுடன் போரிட்டு மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றனர்.


இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பஞ்சபாண்டவர்களில் சிறந்த வில்லாளி என பெயர் பெற்ற அர்ஜுனன். அர்ஜுனனுக்கு மற்றொரு பெயர் விஜயன் என்பதாகும்.


அந்த விஜயன் புரட்டாசி மாதத்தில் வருகின்ற தசமி திதியில் விரதம் இருந்து வன்னி மரத்தை வழிபட்டு போரில் வெற்றி பெற்றதால் இந்த நாளை விஜயதசமி என அழைக்கின்றனர்.

ஒரு நபரின் வாழ்வில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, கல்வித்தடை, வேலைவாய்ப்பின்மை தொழில் வியாபாரத்தில் நஷ்டம், உடல் மற்றும் மனநல குறைபாடுகள் போன்றவை தீர விரதம் இருந்து வன்னி மர வழிபாடு செய்து வர வேண்டும்.


அதிலும் குறிப்பாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை அல்லது தேய்பிறையில் தசமி திதிகளில் விரதம் இருந்து வன்னி மரத்தை வணங்குவதால் சிவபெருமானின் அருள் கிடைத்து உங்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி, நீங்கள் விரும்பிய அனைத்தும் நிறைவேறும்.

வன்னி மர வழிபாட்டை மாதந்தோறும் வருகின்ற தசமி திதிகளில் விரதம் இருந்து செய்வது சிறந்தது தான் என்றாலும் விஜயதசமி தினத்தன்று வன்னி மரத்துக்கு அடியில் பச்சரிசி மாவு சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபமேற்றி வன்னி அத்தி மரத்தை 3 முறை சுற்றி வந்து வழிபாடு செய்வதால் அதன் பிறகு உங்கள் வாழ்வில் அனைத்திலும் மகத்தான வெற்றிகளை மட்டுமே உண்டாகும் என்பது அவர்களின் கருத்தாகும்

No comments:

Post a Comment