தேனி மாவட்டத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 29, 2019

தேனி மாவட்டத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி

தேனி அருகே புதிய அரசு சட்டக்கல்லூரியை துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் தொடங்கி வைத்தார்.


 தேனி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

அதை ஏற்று அரசு உத்தரவிட்டத்தை அடுத்து தேனி அருகே உப்பார்ப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.


முதற்கட்டமாக 38 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது, படிப்படியாக 160 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் புதிய கட்டிடம் கட்டப்பட்ட பின்பு 1700 மாணவர்களுடன் இயங்கும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தேனி எம்.பி ரவீந்திரநாத் குமார், சட்டத்துறை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment