விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், மாரடைப்பால் மரணம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 20, 2019

விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், மாரடைப்பால் மரணம்

வட்டார விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், மாரடைப்பால், விளையாட்டு மைதானத்திலேயே இறந்தார்.


திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே, அரசங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான, குழு விளையாட்டு போட்டிகள், இரண்டு நாட்களாக நடந்து வருகின்றன


.திருவெறும்பூர் அருகே உள்ள, தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் அருண், 32; திருமணம் ஆகவில்லை. இவர், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக, மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தார்.


நேற்று, மைதானத்தில் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது, அருணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மைதானத்திலேயே உயிரிழந்தார்.

No comments:

Post a Comment