அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 8, 2019

அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

அரசு பள்ளியில் ஆசிரியர்கள் முறையாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதில்லை. அடிப்படை ஆங்கில வார்த்தைகூட எழுத தெரியாமல் உள்ளதாக பள்ளி ஆய்வின்போது கலெக்டருக்கு தெரிய வந்தது.



ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடக்கிறது. மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட  கண்மாய்களில் நடைபெறும் பணிகளை கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்து வருகிறார்.


 கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திருவாடானை பகுதி கண்மாய்களை ஆய்வு செய்ய சென்றார். அப்போது ஆனந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திடீர் ஆய்வுக்காக சென்றார்.



அங்கு 9ம் வகுப்பு மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவியல் பாடங்களில் 9 கேள்விகளை கேட்டும், ஆங்கிலத்தில் சின்ன, சின்ன வார்த்தைகளை எழுதுமாறும் கூறியுள்ளார். ஆனால் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை எழுத தெரியாமல் இருந்துள்ளனர்.


மாணவர்கள் தவறுதலாகவும், எழுத தெரியாமலும் இருந்துள்ளனர். மொழிப்பாடங்கள் உள்பட அனைத்திலும் வீக்காக உள்ளது பற்றி ஆசிரியர்களிடத்தில் கேள்வி எழுப்பினார்.


மேலும் அடுத்தாண்டு அரசு பொதுத்தேர்வை எழுத உள்ள நிலையில் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெறுவார்கள் என ஆசிரியர்களிடம் கேட்டார். கிராமப்புற ஏழை எளிய  மாணவர்கள் வசதியற்ற நிலையில் அரசு பள்ளியில் படிக்கின்றனர்.


மாணவர்கள் சிறப்பான கல்வி கற்றால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். முறையாக பாடம் நடத்தி தரமான மாணவர்களாக உருவாக்குங்கள் என  எச்சரித்தார்.


இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘ஆனந்தூர் அரசு பள்ளியில் 6, 7ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துவதில்லை என புகார் வந்துள்ளது.


திடீர் ஆய்வு நடத்தினேன். 9ம் வகுப்பு மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் கணிதம், அறிவியல் என எந்த பாடத்தில் கேள்வி கேட்டாலும் முறையான பதில் இல்லை. 366 பேர் படிக்கும் இப்பள்ளியில் 18 ஆசிரியர்கள் உள்ளனர். போதுமான ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்கள் கல்வித்தரம் உயரவில்லை என தெரியவந்துள்ளது


இரண்டு மாத காலத்தில் மாணவர்களின் தரத்தை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ‘கலெக்டர் உத்தரவின்பேரில் ஆனந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தேன்.


இரண்டு மாத காலத்திற்குள் தரமான கல்வி கற்ற திறமையான மாணவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்திட வேண்டும் என்றும் வரும் நாட்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தி மாணவர்களை தயார் படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன் தொடர்ந்து அனைத்து அரசுப் பள்ளிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன்’ என்றார். 

No comments:

Post a Comment