மடிக்கணினிகளை, முறைகேடாக வழங்கும் பள்ளிகள், கல்வி அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 17, 2019

மடிக்கணினிகளை, முறைகேடாக வழங்கும் பள்ளிகள், கல்வி அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

மாணவர்களுக்கு வழங்குவதற்காக 15.53 லட்சம் மடிக்கணினிகள் தயாராக உள்ள நிலையில் அவற்றை விநியோகிப்பதில் பின்பற்ற நடைமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களும்,  தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.


2017-2018 மற்றும் 2018-2019- ஆம் ஆண்டுகளில்  பிளஸ் 2 முடித்தவர்களுக்கும், தற்போது பிளஸ் 2 படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கும்  வழங்க 15.53 லட்சம்  விலையில்லா மடிக்கணினிகள் தயார் நிலையில் உள்ளதாக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மடிக்கணினிகளை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்வி அலுவலகங்களுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மடிக்கணினிகளைப் பெறும் பள்ளிகள்,  உரிய பாதுகாப்புடன் அதை வைத்து, உடனுக்குடன் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். எல்காட் நிறுவனத்தின் அனுமதி பெற்ற பின்னரே ஒரு பள்ளியில் இருந்து வேற பள்ளிக்கு மடிக்கணினியை மாற்ற வேண்டும்.


மடிக்கணினிகளை, கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) உள்ள தரவுகளின் படியே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பள்ளிக்கு வரும் உண்மையான மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.


மடிக்கணினிகளை வழங்கும் முன் சரிபார்த்து, உரிய முறையில் வழங்கி பதிவேட்டில் பார்கோடை மாணவர்கள் பெயர்களுக்கு நேராக பதிவு செய்ய வேண்டும்.


மடிக்கணினிகளை, முறைகேடாக வழங்கும் பள்ளிகள், கல்வி அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார்

No comments:

Post a Comment