தீபாவளி - வெளியூர் பேருந்துகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்! சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டம்!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 26, 2019

தீபாவளி - வெளியூர் பேருந்துகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்! சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டம்!!



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. எனவே தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வெளியூரில் இருந்து வந்து சென்னையில் வசிக்கும் மக்கள் அக்டோபர் 25ம் தேதியே (வெள்ளிக்கிழமை) சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவார்கள்.
அந்த வகையில், தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்புதான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.
பொதுவாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 1200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பண்டிகைக் காலங்களில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள். இதில்லாமல் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்குவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி எந்தெந்த ஊர்களுக்கு எத்தனை சிறப்புப் பேருந்துகளை இயக்குவது என்பது குறித்து தமிழக விரைவில் ஆலோசனை நடத்தி அறிவிக்க உள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ற அளவுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதே சமயம், தீபாவளிப் பண்டிகையன்று ஏராளமானோர் ஒரே நேரத்தில் வெளியூர் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் போக்குவரத்துக் காவல்துறையினருடன் அரசு ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment