ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு சார்ஜ் செய்யலாம்.. வயர், சார்ஜர் எதுவும் தேவையில்லை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு சார்ஜ் செய்யலாம்.. வயர், சார்ஜர் எதுவும் தேவையில்லை!

வயர், சார்ஜர் எதுவும் இல்லாமல், வயர்லெஸ் முறையில் ஒரு போனில் இருந்து மற்றொரு போனை சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போனை சியோமி  நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்போது வரும் புதிய ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியோடு அறிமுகம் செய்யப்படுகிறது. சிறிய தட்டு போன்ற கருவி வயர் மூலம் பிளக்கில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த தட்டின் மேல் போனை வைத்தால் போதும். காந்தப்புலம் மூலமாக சார்ஜ் ஏறிவிடும். காந்தப்புலம் என்பது Electromagnetic Induction ஆகும்.


இந்த கருவி மின்சாரத்தை காந்தப்புலமாக மாற்றுகிறது. பின்பு, போனில் காந்தப்புலத்தை மின்சாரமாக மாற்றும் நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும்.

 இதன் மூலம் காந்தப்புலத்தில் இருந்து ஸ்மார்ட்போன் எளிமையாக சார்ஜ் ஏறுகிறது. இதுவே வயர்லெஸ் சார்ஜ் ஆகும்.

இது ஒரு பக்கம் இருக்க, இதே போல், போனில் இருக்கும் சார்ஜை மற்றொரு போனிற்கு மாற்றும் தொழில்நுட்பமும் உள்ளது.


இதற்கு ‘ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜ் (Reverse Wireless Charge)’ என்று பெயர். முதன் முதலாக ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட்டது. பின்னர், சாம்சங் S10+ போனில் வந்தது.
போனின் பின்புறத்தில் மற்றொரு போனை வைத்தால் போதும்.

 போனில் இருக்கும் சார்ஜை அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இரு போன்களிலும் ரிவர்ஸ் சார்ஜ் வசதி இருக்க வேண்டும்.


அந்த வகையில், தற்போது சியோமியின் அடுத்து வரவுள்ள ஸ்மார்ட்போனில், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டு வரப்பட உள்ளது. இது தொடர்பாக MIUI beta  வலைப்பக்கத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே, ஹூவாய், சாம்சங்கிற்கு அடுத்தபடியாக ரெட்மி போனில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜ் வசதி கொண்டு வரப்படுகிறது.


மேலும் 90 நொடிகள் வரையில் போன் எதுவும் சார்ஜ் செய்யப்படவில்லை என்றால், முதல் போனில் சார்ஜ் சப்ளை ஆட்டோமெட்டிக்காக நின்றுவிடும். சார்ஜ் செலவை மிச்சப்படுத்தும் வகையில் இந்த நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment