நாசா’ விண்வெளி ஆய்வுமையம் சென்று விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெற்ற ஒரே தமிழக மாணவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 28, 2019

நாசா’ விண்வெளி ஆய்வுமையம் சென்று விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெற்ற ஒரே தமிழக மாணவி

மதுரை பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் ‘நாசா’ விண்வெளி ஆய்வுமையம் சென்று, அங்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.


மதுரை அருகே கள்ளந்திரி கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவர் ஜாபர் உசேன். இவரது மகள் தான்யா தஷ்னம் (15). மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவி. இதே பள்ளியில் இவரது தாயார் சிக்கந்தர் ஜாபர்  ஆசிரியையாக உள்ளார்.


 தான்யா தஷ்னம், அறிவியல் ஆர்வம் காரணமாக இணையதளத்தில் நடத்தப்படும் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் பங்கெடுத்தார்.

இதில் தான்யா தஷ்னம், சாய்புஜிதா (ஆந்திரா), அலிபக் (மகாராஷ்டிரா) தேர்வாகினர். இதனால், மூவரும் விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்கின்றனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா சென்று விண்வெளி ஆராய்ச்சி  மையமான நாசாவில் இவர்கள் ஒருவாரம் தங்குகின்றனர்.


அங்குள்ள ஆய்வகத்தை சுற்றிப்பார்ப்பதுடன், அங்குள்ள விஞ்ஞானிகளுடனும் கலந்துரையாடுகின்றனர். நாசா செல்லும் வாய்ப்பை பெறும் ஒரே தமிழக மாணவி இவர் என்பது  குறிப்பிடத் தக்கது.


இதுகுறித்து மாணவி தான்யா தஷ்னம் கூறும்போது, ‘‘அறிவியல் மீதான ஆர்வத்தில், ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே விஞ்ஞானியாகும் ஆசை ஏற்பட்டது. இதற்கு நாசா பயணம் ஒரு படிக்கட்டாக அமையும்’’ என்றார்.

No comments:

Post a Comment