பள்ளிகள் முடியும் நேரம் மாறுது! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 19, 2019

பள்ளிகள் முடியும் நேரம் மாறுது!

திருப்பூரில் செயல்படும் அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் நிறைவு நேரத்தை மாற்றுவது குறித்து விரைவில் முடி வெடுக்கப்பட உள்ளது.திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக உள்ளது.

 அவிநாசி ரோடு, பி.என்., ரோடு, பல்லடம் ரோடு ஆகிய முக்கிய ரோடுகளில் 'பீக் ஹவர்'களில், ஒவ்வொரு நாளும் நெரிசல் அதிகரிக்கிறது.

பள்ளி வேலை நாட்களில், பள்ளி துவங்குவதற்கு முன், காலை, 7:30 முதல், 9:00 மணி வரை. மாலை, 4:00 முதல் 5:30 மணி வரை இந்த ரோடுகள் ஸ்தம்பித்துவிடுகின்றன.


சமீபத்தில் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், 'ஒரே நேரத்தில் பள்ளிகள் நிறைவு பெறுவதால், பஸ்சில் மாணவர்கள் ஏறுவதும், படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதும் அதிகரித்துள்ளது.

எனவே, பத்து முதல், 15 நிமிட இடைவெளி விட்டு மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்ப வேண்டும்,' என தெரிவித்தது.


திருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், இடுவம்பாளையம், குமார் நகர் உள்ளிட்ட பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிக்கின்றனர்.


இப்பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு முடிந்து பின், 5:00 மணிக்கு பின்னரே பள்ளி நிறைவு பெறுகிறது.


 ஆனால், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அத்தகைய வகுப்புகளை, 3:45 முதல் மாலை, 4:45 க்குள் நிறைவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இந்த வாரத்தில் இதுகுறித்து ஆலோசித்து அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுப்பர் என முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment