பட்டப் படிப்பை முடிக்காதவர்கள் அரியர் எழுத இறுதி வாய்ப்பு:சென்னைப் பல்கலை. அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 20, 2019

பட்டப் படிப்பை முடிக்காதவர்கள் அரியர் எழுத இறுதி வாய்ப்பு:சென்னைப் பல்கலை. அறிவிப்பு

இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்கத் தவறியவர்களுக்கு, அரியர் தாள்களை எழுத இறுதி வாய்ப்பை சென்னைப் பல்கலைக்கழகம் அளித்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2012 ஏப்ரல் மற்றும் அதற்கு முன்னரும் இளநிலை மற்றும் முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளை முடித்து அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, 2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரல் ஆகிய இரு பருவத் தேர்வுகளில் பங்கேற்று அரியர் தாள்களை எழுதிக்கொள்ளலாம்.
இதில் முதுநிலை பட்ட மாணவர்கள் நடப்பு வழிகாட்டுதலின் அடிப்படையிலான பாடத் திட்டம் குறித்து பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்ட தேர்வுத் துறையை அணுகி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment