தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 24, 2019

தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில், நகராட்சி மண்டல நிர்வாக அலுவலகம் உள்ளது.


இதன் கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில், 18 நகராட்சிகள் உள்ளன. இங்கு, இரண்டு லட்சத்து, 94 ஆயிரம் வீடுகள் உள்ளன. நகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஒரு லட்சம் வீடுகளில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லை என, கண்டறியப்பட்டது.


இதையடுத்து, அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு, அந்தந்த நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்இது குறித்து, வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:


மழைநீர் கட்டமைப்பு வசதிகள் இல்லாத, ஒரு லட்சம் வீட்டு உரிமையாளர்கள், வரும் செப்., 30க்குள் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.


தவறினால், அவர்கள் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என, கடந்த வாரம் அனுப்பிய நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள, 490 அரசு பள்ளிகளில், 73ல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment: