நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ

ஒட்டன்சத்திரத்தில் நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியதை பொதுமக்கள் பார்த்து ரசித்து வணங்கினர். இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்ச்சத்திரத்தில் இந்த அபூர்வம் நடைபெறுகிறது. பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள்.


 இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் என்பதால் இது அதிசய பூவாக கருதப்படுகிறது.


அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது.


 ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது.


அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்று தோன்றும். அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும். ஆனால் இந்த பூவானது விரைவில் வாடிவிடும்.


இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை உள்ளது.


 அதிலும் அந்த அற்புத மலர், ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும். ஆனால் தற்போது இந்த மலரை சிலசமயங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க காலநிலைகளிலும் காண முடிகிறது.


இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க சிறந்த தோட்டப்பராமரிப்பு மற்றும் இந்த செடி பற்றிய அறிவு இருந்தால் இந்த செடியை வளர்க்கலாம்.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிரதான சாலையில் சத்தியநாதன் என்பவர் தனது வீட்டில் பிரம்ம கமல பூ செடியை வளர்த்து வந்தார். இந்த செடி 15 வருடமாக வளர்ந்து வந்தது. இது ஆண்டுக்கு 1 ஒரு முறை தான் பூக்கும். தற்போது இந்த பூ பூத்து குலுங்குகிறது.


 ஆடி மாதம் மாலை நேரத்தில் பூத்த இந்த அதிசய பூவை அக்கம் பக்கத்தினர் ஆர்வமுடன் பார்த்து வணங்கி செல்கின்றனர்.


இந்த பூவைப் பார்த்து பெரியவர்கள் தொட்டுக் கும்பிட்டு வணங்கினர். பூ பூக்கும் நள்ளிரவு வேளையில் இதை வணங்கி தங்கள் குறைகளை நீக்க வேண்டிக்கொண்டனர்.

No comments:

Post a Comment