வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க இந்த இணைப்பு அவசியம் என்று கூறியுள்ளது. ஏற்கனவே பான் எண், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, எரிவாயு சிலிண்டர், செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அதில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதால் வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் பலமுறை இடம் பெறுவதை தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன் போலி வாக்காளர்கள் கள்ள ஓட்டு போடுவது போன்ற அனைத்து முறைகேடுகளையும் இதன் மூலம் தடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டை, ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்த வசதியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment