நாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வதை கேட்டோ, பார்த்தோ இருப்போம். அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை தான் இது.
பித்தமானது நமது உணவில் உள்ள கொழுப்பு சத்தை கிரகித்துக் கொள்ள தேவைப்படுகிறது. மேலும் பித்தமானது கழிவுப் பொருட்கள், பித்த தாது உப்புக்கள், வேண்டாத கொலஸ்ட்ரால்களை வெளியேற்ற உதவுகின்றது.
பித்தமானது கல்லீரலில் உருவாகி, பித்தப்பையில் தேக்கி வைக்கப்பட்டு, தேவைப்படும் போது பித்தக் குழாய் வழியாக சிறுகுடல் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. தினமும் ஒருவருக்கு சுமார் அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர் வரை பித்தம் சுரக்கின்றது.
கல் உற்பத்தியாவதற்கு, பித் தத்திலுள்ள கொலஸ்ட்ரால், கால்சியம் உப்புக்கள், தாதுக்களை கரைச்சல் வடிவத்தில் வைக்க பித்தம் தோல்வியடையும் போது கல் உருவாகின்றது. நாம் பித்தக் கற்களை கொலஸ்ட்ரால் கற்கள் என்றும், நிறக்கற்கள் என்றும் வகைப்படுத்துகின்றோம்.
70-80% கொலஸ்ட்ரால் கற்களாகவும், 20-30% நிறக்கற்களாகவும் இருக்கின்றது. கற்கள் உற்பத்தி ஆகும் முன்பு, சிறு மணல் துகள்கள் போன்று தேக்கமடையும்.
பித்த உற்பத்தியைவிட கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகமாகும்போது, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாகின்றது. அப்போது கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாகி, அப்படிவங்கள் ஒன்றின் மேல் ஒன்று படிந்தோ, இணைந்தோ கற்கள் உருவாகின்றது. நிறக்கற்கள், கால்சியம் உப்புடன் பித்தம், பாஸ்பேட் தாதுக்கள் சேரும்போது உருவாகின்றது. இரத்த சேதம், கல்லீரல் நோய்கள், கிருமிகள் தாக்கத்தினாலும் பித்தக்கற்கள் உருவாகின்றது.
பித்தக்கற்களினால் வரும் பாதிப்பு:
பலருக்கு பித்த கற்கள் எந்த தொந்தரவும் தராமல் இருக்கும். சிலருக்கு பித்தம் வரும் குழாய் அடைக்கப்பட்டு வலி உண்டாகலாம். அதனால் பித்தப்பை சுழற்சி, அழுகிப் போகுதல், நுண் கிருமிகள் தொற்றி, வலி, காய்ச்சல், மஞ்சள் காமாலை உருவாகலாம். பித்தக்கற்கள் நகர்ந்து பித்தக்குழாய் அடைப்பு, கணையம் சுழற்சி, குடல் தேக்கம், பித்தப்பை புற்று நோய்கள் உருவாகலாம்.
எந்த தொந்தரவும் தராத கற்கள் உள்ளவர்களில் ஆண் டொன்றில் 1-2% நோயாளி களுக்கு தொந்தரவும், அதற்கான வைத்தியமும் செய்ய நேரிடலாம். அதிக காலம் கற்கள் தொந்தரவு தராமல் இருந்தால், அது தொந்தரவு தர வாய்ப்புக் குறைவு.
நோய் கண்டறிதல்:
1.அல்ட்ராசவுண்ட்ஸ்கேன்.
சுமார் 98% பித்தக் கற்களை இதன் மூலம் கண்டுபிடிக்க இயலும்.
2. எக்ஸ்ரே
10-15% பித்தக் கற்களை மட்டுமே கண்டுபிடிக்க இயலும்.
3. கோலிஸ்ண்டிகிராபி
இதன் மூலம் பித்தப்பை, பித்தக்குழாய், கல்லீரல் முதலியவற்றின் செயல்பாட்டினை அறிய முடியும்.
4. சி.டி.ஸ்கேன்நோய் அறிகுறிகள்
1. வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கமாக, திருகு வலியாகவும், அந்த வலி வலது தோள், முதுகு போன்ற இடத்திற்கு பரவவும் செய்யலாம்.
2. மஞ்சள்காமாலை மற்றும் விட்டு விட்டு மஞ்சள் காமாலை.
3. காய்ச்சல்
4. வாந்தி
5. வயிற்றுவலி பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவு எடுத்துக் கொண்டால் வரும்.
பித்தக்கற்களினால் வரும் வலியை நோயாளிகள் நன்கு அறிவர். ஒரு வருடத்தில் எத்தனை தடவை வந்தது என்பது முதல், எவ்வளவு நாள் இருந்தது என்பதை நினைவு கூறும் அளவிற்கு அந்த வலி இருக்கும். வலியானது 1-5 மணி நேரத்திற்கும், பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வலி குறைந்துவிடும். அவ்வாறு குறையாவிட்டால் பித்தப்பை அழுகும் நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
6. புளித்த ஏப்பம்
7. நெஞ்சு கரிப்பு, உப்புசம்.
வைத்திய முறைகள்:-
1. கிருமிகளை அழிக்கும் ஆண்டிபயாடிக் மருந்து, 2. படுக்கை ஓய்வு, 3. வலி நிவாரண மருந்துகள், 4. ஆப்பரேஷன்,
a. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, b. திறந்த வகை அறுவை சிகிச்சை, c. எஸ்டோஸ்கோபி முறை
a .லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை எனப்படும் சாவி துவார துளை வழியாக பித்தப்பை அகற்றுதல்.
நன்மைகள்:-
1. குறைந்த இரத்த சேதம், 2. சிறு தழும்பு, 3. ஆப்பரேஷனுக்கு பின்பு பணிக்கு விரைவாக செல்லுதல், 4. வலி குறைவு, 5.குடல் இறக்கம் போன்ற தையல் விடுவதால் வரக்கூடிய தொந்தரவு குறைவு, 6. கடினமான வேலைகளை வழக்கம் போல் செய்ய முடியும்.
தீமைகள்:-
1. சில நேரங்களில் மிகவும் அழுகிய நிலையில் உள்ள பித்தப்பையை இந்த வகை ஆப்பரேஷன் மூலம் அகற்றுவது கடினம். 2. பித்தப்பை புற்று நோய் ஏற்பட்டிருப்பின் இந்த வகை ஆப்பரேஷன் செய்தல் கூடாது. 3. சில நேரங்களில் இரத்தக் கசிவை நிறுத்துவது கடினமாகி, திறந்த வகை ஆபரேஷனுக்கு மாற்றப்பட வேண்டியது ஆகலாம்.
திறந்த வகை ஆப்பரேஷன் (Open Surgery)

1. பித்தப்பை புற்று நோய்கள், 2. அதிக இரத்த சேதம் ஏற்பட நேர்தல், 3. அழுகிய நிலையில் உள்ள பித்தப்பை.
தீமைகள்:-
1. மிக நீளமான தழும்பு, 2. வேலைக்கு செல்வதற்கு தாமதம், 3. அதிக வலி, 4. மிக கடினமான வேலை செய்தல் சிரமம், 5. குடல் இறக்கம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு, 6. எண்டோஸ் கோபி மூலம் அகற்றுதல். வாய் வழியாக இந்தக் கருவியை இரப்பை சிறுகுடல், பித்தக்குழாய் வழியாக செலுத்தி பித்தக் குழாய் கற்களை அகற்றுதல்.
பித்தப்பை கல்லுக்கு ஹோமியோபதி மூலம் முழுமையான குணமடைய முடியும் நிறைய பேர் குணமடைந்துள்ளனர்
ReplyDeleteஆங்கில மருத்துவரிடம் போனால் பித்தப்பை அகற்றுவதை தவிர வேறு வழியே இல்லை என்று கூறுவர் முயற்சி செய்து இந்திய மருத்துவத்தின் மூலம் எனது சகோதரிக்கு நல்ல முறையில் தீர்வு கண்டோம்
ReplyDeleteபித்தப்பை கல்லுக்கு ஹோமியோபதி மூலம் முழுமையான குணமடைய முடியும் நிறைய பேர் குணமடைந்துள்ளனர்
ReplyDelete