செல்போன் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

செல்போன் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஸ்மார்ட் போன் சப்தத்துடன் வெடித்த சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஓரிடத்தில் டெக்னீசியன் ஒருவர் ஸ்மார்ட் போனில் உள்ள செயலிழந்த பேட்டரியை மாற்ற முயற்சி செய்கிறார். அப்போது  எதிர்பாராதவிதமாக ஸ்மார்ட் போன்  வெடித்து தீ பிடித்துள்ளது. உடனே அவர் அந்த போனை டேபிளில் இருந்து தரையில் தள்ளிவிட்டுள்ளார்.


 பின்னர் அவர் தீயை அணைப்பதற்காக அந்த ஸ்மார்ட் போனை தனது ஷூ காலால் மிதித்துள்ளார்.  அந்த டெக்னீஷியன் செய்தது முட்டாள் தனமான செயல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் போன் தீப்பிடிக்கும்போது, பெரும்பாலானவர் செய்யும் தவறான செயல்கள் வருமாறு:

* போன் வெடித்து தீ பிடித்தவுடன் அதை தரையில் கீழே தள்ளிவிடுவார்கள். போனில் பிடித்த தீயை செருப்பு காலால் அல்லது ஷூவால் மிதித்து அணைக்க முயற்சிப்பார்கள்.



* சணல் பை அல்லது கணமான துணியை அதன் மேல் போட்டு மூடி தீயை அணைக்க முயற்சி செய்வார்கள்.
* சிறிய செம்பு அல்லது வாளியில் தண்ணீர் கொண்டு வந்து அதன் மேல் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்வார்கள்.

* தீ எரியட்டும் என்று விட்டுவிட்டால், அருகில் இருக்கும் சோபா பர்னிச்சர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களில் தீப்பிடித்து எரிந்துவிடும் அபாயம் உள்ளது.



* சரி அப்படியே தீயை அணைக்காமல் விட்டுவிடுவதா என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி ஒன்றும் விட்டுவிட வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.ஸ்மார்ட் போன்களில் அதிக அளவில் எரிசக்தி உள்ளது.


 அதில் உள்ள லித்தியம் அயர்ன் பேட்டரி தீ பிடித்து எரியும்போது, 600 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். தீயை அணைக்க நீங்கள் முயற்சி செய்யும்போது, உங்களது செருப்பு  அல்லது ஷூவையும் காலையும் எரித்துவிடும் சக்தி கொண்டது.


 அதேபோல், சணல் மற்றும் துணியால் மூடி அணைக்க முயன்றால் அவற்றையும் எளிதில் எரித்துவிடும் சக்தி உடையது. 600 டிகிரி செல்சியஸ் என்பது அலுமினியம்  உலோகத்தை உருக்கக் கூடியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விழிப்புடன் செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம்.

தீயை அணைக்க..

* தீப்பிடித்த போனை, ஏதாவது கம்பி போன்ற பொருளால் உடனே கான்கிரீட் தரையில் தள்ளிவிடுங்கள்.

கையினால் எக்காரணத்தையும் கொண்டு தள்ளிவிட முயற்சி செய்யாதீர்கள்.
* அந்த போன் தரையில் விழுந்த இடத்தில் எளிதில் தீபற்றக்கூடிய பொருள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* தீ பிடித்த போனின் அருகில் செல்லாதீர்கள்.


அந்த போனில் இருந்து வெளியாகும் புகையை சுவாசிக்காதீர்கள். மூக்கை ஒரு துணியால் மூடிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதில் இருந்து வெளியாகும் நச்சு புகை உங்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும்.


* உடனே ஏதாவது ஒரு பாத்திரத்தில் அல்லது பாட்டிலில் குளிர்ந்த தண்ணீரை எடுத்து எரியும் போனில் மெதுவாக ஊற்ற வேண்டும். தீ அணைந்துவிடும். ஊற்றக் கூடிய தண்ணீர் சாதாரணமாக இருந்தால் பயனில்லை.


மிகக் குளிர்ந்த நீராக  இருக்க வேண்டும். இல்லை என்றால் தீயணைப்பு கருவியைக் கொண்டு அணைக்க வேண்டும். மணல் இருந்தால் அதை அதன் மேல் குவித்தும் அணைக்கலாம்

No comments:

Post a Comment