திண்டுக்கல் பூட்டு மற்றும் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கைவினை பொருட்கள் மற்றும் கலைஞர்களை காக்கும் பொருட்டு இந்திய அரசு 1999-ம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது.
நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடை யாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது.
இதற்கிடையே, புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு 150 ஆண்டுகளுக்கு முன் சங்கரலிங்காச்சாரி சகோதரர்களால் தயாரிப்பு துவங்கப்பட்டது.
பல்வேறு வடிவங்களில் தனித்தன்மையுடன் தயாரிக்கப்பட்டு வரும் திண்டுக்கல் பூட்டு பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. 2013-ம் ஆண்டு பூட்டு தொழிலாளர்கள் சங்கத்தால் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமும் 2013-ம் ஆண்டு புவிசார் குறியீட்டிற்காக விண்ணப்பித்திருந்தது.
சமீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டு, திண்டுக்கல் பஞ்சாமிர்தம், ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சேலம் மாம்பழம், ஓசூர் ரோஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, ராஜபாளையம் நாய், காரைக்குடி கண்டாங்கி சேலை, கோடாலிகருப்பூர் சேவை ஆகிய 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு கிடைத்துள்ளது.
புவிசார் குறியீடு:
புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment