தமிழகத்தில் முதன் முறையாக பால் வழங்க ஏ.டி.எம்., மையம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 28, 2019

தமிழகத்தில் முதன் முறையாக பால் வழங்க ஏ.டி.எம்., மையம்

தமிழகத்தில் முதன் முறையாக, அரூரில், பால் வழங்க, ஏ.டி.எம்., மையம் அமைக்கப்பட்டுள்ளது.


தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, கொளகம்பட்டியைச் சேர்ந்தவர், முருகன், 40; விவசாயி. பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், 12 ஆண்டுகளாக, விவசாயிகளிடம் இருந்து, பாலை கொள்முதல் செய்து, தனியார் நிறுவனத்துக்கு அனுப்பி வந்தார்.

மக்களுக்கு, 24 மணி நேரமும், பால் வழங்க திட்டமிட்ட அவர், ஹரியானா மாநிலத்தில் இருந்து, 4 லட்சம் ரூபாய்க்கு, இயந்திரம் வாங்கி வந்து, அரூர், நான்கு ரோட்டில், இரண்டு மாதத்திற்கு முன், பால் வழங்கும், ஏ.டி.எம்., மையத்தை நிறுவினார்.

தினமும் சேகரிக்கும் பாலை, மிஷினில் நிரப்பி விடுகிறார்.

இதில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான அளவு பாலை, பணம் செலுத்தி பெறலாம்.
இது குறித்து, முருகன் கூறியதாவது:
ஏ.டி.எம்., இயந்திரத்தில் குளிர்சாதனத்துடன், 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்டி, உள்ளது.

 காலை, 6:00 முதல், இரவு, 8:30 மணி வரை பணம் செலுத்தி, 200 மில்லி முதல், ஐந்து லிட்டர் வரை வேண்டிய அளவுக்கு பாலை பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு வசதி செய்யப்பட்டுள்ளது.

 இயந்திரத்தில் பணம் செலுத்தி, கார்டை ரீசார்ஜ் செய்து பால் பெறலாம். இங்கு வருவோர் பாத்திரங்களை எடுத்து வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ள இந்த பால் வழங்கும் ஏ.டி.எம்., மையம், தமிழகத்தில் முதன் முறையாக, அரூரில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment