இஸ்ரோ' வினாடி - வினா 'ஆன்லைன்' பதிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, August 26, 2019

இஸ்ரோ' வினாடி - வினா 'ஆன்லைன்' பதிவு

பள்ளி மாணவர்களுக்கு, 'சந்திரயான் - 2' தொடர்பாக, 'இஸ்ரோ' அறிவித்த, வினாடி - வினா போட்டிக்கான பதிவு முடிந்தது.

நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என, ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான, இஸ்ரோ, சந்திரயான் - 2 விண்கலத்தை, ஜூலை, 22ல், விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலம், செப்., 7ல் நிலவில் தரையிறங்க உள்ளது.இந்த நிகழ்வை பார்க்க, பிரதமர் மோடியை, இஸ்ரோ நிறுவனம் அழைத்துள்ளது.

இதற்கான நிகழ்ச்சி, பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், செப்., 7ல் நடக்க உள்ளது. இதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகளை, இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.


நிகழ்வில் ஒன்றாக, பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான் - 2 குறித்த, வினாடி - வினா போட்டியை ஆன்லைனில், இஸ்ரோ நிறுவனம் நடத்துகிறது.


 இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிந்தது. பதிவு செய்த மாணவர்களுக்கு, விரைவில் வினாடி - வினா போட்டியை நடத்தப்பட உள்ளது.


இதில், தேர்வு செய்யப்படுவோர், பிரதமர் கலந்து கொள்ளும் விழாவில், பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment