டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளிகளில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு

டெங்கு காய்ச்சலை தடுக்க 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகங்கள், மைதானங்களை தூய்மையாகப் பராமரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


அதில், மழைக்காலம் தொடங்கவிருப்பதால், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலைக் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள தேவையற்ற செடிகள், முள்புதர்கள், தேங்கியிருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பள்ளி மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள், எதனால் காய்ச்சல் ஏற்பட்டது, என்ன காய்ச்சல் என்று தலைமை ஆசிரியருக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment