வருகிறது சிறப்பு ஆய்வுக்குழு; தலைமையாசிரியர்களே, அலர்ட்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 3, 2019

வருகிறது சிறப்பு ஆய்வுக்குழு; தலைமையாசிரியர்களே, அலர்ட்!

ஒரு மாதிரி வகுப்புக்கான அனைத்து அம்சங்களையும் தயார் நிலையில் வைக்குமாறு, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


ஐகோர்ட் உத்தரவையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இணை இயக்குனர் தலைமையில் முதன்மை கல்வி அலவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரகல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.


இக்குழு அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று, பள்ளி பதிவேடுகள், ஆசிரியர் கற்பித்தல் திறன்களை ஆய்வு செய்ய உள்ளனர்.


எனவே, தலைமை ஆசிரியர், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகையான பதிவேடுகளையும், 'அப்டேட்' செய்து தயார்நிலையில் வைத்துக்கொள்ளவும்.


மேலும், குழந்தைகளின் கற்றல் திறன் அடிப்படையில், மிக நன்றாக படிப்போர் - 'ஏ'; நன்றாக படிப்போர் - 'பி'; சுமாராக படிப்போர் - 'சி'; இன்னும் முயற்சி தேவை - 'டி' என பிரிவுகளாக பிரித்து வைக்க வேண்டும்.


இவர்களில், 'சி', 'டி' தரநிலையில் உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை, உரிய ஆசிரியர் பயிற்றுனரிடம் பெற்று தலைமை ஆசிரியர்கள், 'ஆக்சன் பிளான்' தயார் செய்து வழங்கி பதிவு செய்திருக்க வேண்டும்.

ஹோம் ஒர்க் நோட், கற்பித்தல் உபகரணங்கள், வகுப்பு வாரியாக கற்பித்தல் விவரங்கள், பாடபுத்தகத்தில் உள்ள பார்கோடு மற்றும் க்யூஆர் கோடு பயன்பாடு, ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர்களே தயார் செய்த பொம்மைகள், படங்கள், கற்பித்தல் துணை கருவிகள் என, மாதிரி வகுப்புக்கான அத்தனை அம்சங்களையும் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் ஆய்வுக்குள்ளாகப்படும் என்பதால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ரெடியாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment