அரசு பள்ளி மாணவர்களுக்கு நாடகம் மூலம் நற்பண்புகளை கற்பிக்கும் ஆசிரியர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 25, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு நாடகம் மூலம் நற்பண்புகளை கற்பிக்கும் ஆசிரியர்

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி யோடு நற்பண்புகளையும் கற்று ஒழுக் கத்துடன் வளரும் வகையில் தனியார் பள்ளி நாடக ஆசிரியர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக இலவச நாடகப் பயிற்சி அளித்து வருகிறார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந் தவர் செல்வம்(40). இவர் ஏழைக் குழந்தைகள் பராமரிப்பு பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தபோது நாடகக் கலையைக் கற்றார். தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நற்பண்புகளை நாடகக் கலை மூலம் கற்றுத் தருகிறார்.


இதுவரை அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 1,500 மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்துள்ளார்.

இது குறித்து தனியார் பள்ளி நாடக ஆசிரியர் செல்வம் கூறியதாவது:

மதுரையைச் சேர்ந்த பரட்டை என்ற தியோபிலஸ் அப்பாவு என்பவரிடம் வீதி நாடகத்தைக் கற்றுக் கொண்டேன்மதுரை, தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளிகளில் தற்போது பகுதி நேர நாடக ஆசிரியராக உள்ளேன்.


தியாகம் பெண்கள் அறக்கட்டளை சார்பில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நற்பண்புகளை வளர்க்கும் நாடகப் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக 15 ஆண்டுகளாக இருந்தேன்.

அந்த அனுபவத்தில் நாடகத்தை நற்பண்புகளை வளர்க்கும் கல்வியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு 2015-ம் ஆண்டில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாடகப் பயிற்சியை அளித்து வருகிறேன்.


இதுவரை 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்துள்ளேன். மாணவர்களையே நடிக்க வைத்து அதன் மூலம் நல்ல பண்புகளை கற்கச் செய்கிறேன்.


மூன்று நிமிட நாடகப் பயிற்சியில் நல்ல குணங்களை உணரச் செய் கிறேன். இதேபோல், ஆசிரி யர்கள், பெற்றோருக்கும் பயிற்சி அளிக் கிறோம்.

குறிப்பாக கஜா புயலால் பாதி க்கப்பட்ட பகுதிகளில், பேரிடர் கால ங்களில் எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை வீதி நாடகமாக நடத்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment