காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻

*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*
02-08-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள்- 212*

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
 வேளாண்மை செய்தற் பொருட்டு.

*மு.வ உரை:*

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

*கருணாநிதி  உரை:*

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

*சாலமன் பாப்பையா உரை:*

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நாம் நம்மால் முடியாது எந்றி நினைக்கும் செயல்களை யாரோ ஒருவர் என்கோ ஓரிடத்தில் செய்து கொண்டு இருக்கிறார் என்பதை  மறந்து விடாதே!

✳✳✳✳✳✳✳✳

*பழமொழி*

அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அமிர்தம்.

A smooth tongue and an evil heart.

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*Important Used Words*

 That அது

 Sure கண்டிப்பா

 Sir அய்யா

 There அங்கே

 Affection அன்பு / பாசம்

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*conditionals*

What are conditionals in English grammar? Sometimes we call them 'if clauses'. They describe the result of something that might happen (in the present or future) or might have happened but didn't (in the past) . They are made using different English verb tenses.

*There are four kinds:*

The Zero Conditional:
(if + present simple, ... present simple)
If you heat water to 100 degrees, it boils.
The First Conditional:
(if + present simple, ... will + infinitive)
If it rains tomorrow, we'll go to the cinema.

The Second Conditional:

(if + past simple, ... would + infinitive)
If I had a lot of money, I would travel around the world.

The Third Conditional :

(if + past perfect, ... would + have + past participle)
If I had gone to bed early, I would have caught the train.

📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் தமிழ்*

தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

 *நீதிக்கதை*

 ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும் கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில் அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும் அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார்.

 ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால் உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர் விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி சார் உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார்.

 ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன் இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ நெல் விளைவித்தது நீ என்னை உணவருந்த அழைத்தது நீ அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான்.

 விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து காய்த்து கனிந்து முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால் உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால் படித்து என்ன பயன்? என்று கூறினார்.

 இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து இறைவனுக்கு நன்றி கூறின.

நீதி :
அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮நின்ற கோலத்தில் எழுந்தருளினார் அத்திவரதர்! தரிசிக்க அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்.

🔮காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு.

🔮மக்களவையில் காகிதமற்ற முறை உருவாகும் என சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

🔮குஜராத்தில் கனமழையை அடுத்து வெள்ளம் காரணமாக தெருக்களில் முதலைகள் படையெடுத்துள்ளன.

🔮சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நடைபெறுகிறது

Vadodara flooded , people evacuated from low lying areas

I T department launches ‘Lite’ e-filing facility for taxpayers.

🔮Evaluating Pakistan’s proposal of facilitating consular access to Kulbhushan Jadhav: MEA

🔮Supreme Court orders transfer of Unnao cases to Delhi CBI court.

♻♻♻♻♻♻♻♻

*தொகுப்பு*

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment