இணையத்தில் அட்வான்ஸ் புக்கிங் செய்தால், மொபைல் போனுக்கு சினிமா டிக்கெட் எஸ்.எம்.எஸ். ஆக வந்துவிடுகிறது. ஆண்ட்ராய்ட் appலேயே மட்டன் பிரியாணி ஆர்டர் செய்ய முடிகிறது.
உட்கார்ந்த இடத்திலிருந்தே குண்டூசி தொடங்கி குதும்பினார் வரை மவுஸை நகர்த்தியே வாங்கிவிடலாம். தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி தரும் சொகுசு இது.சுட்டெரிக்கும் கோடையில் கடை கடையாக ஏறி இறங்க வேண்டாம்.
மால்களில் பார்க்கிங்கு பாதி சொத்தை எழுதித்தர வேண்டாம். முன்பு போல அலைந்து திரிந்து, நான்கைந்து கடை ஏறி ஷாப்பிங் செய்ய வேண்டியதில்லை.
நமக்கு எந்த பொருள் வேண்டுமோ, அதை கடையில் வாங்குவதைவிட மிகக்குறைவான விலையில் இணையத்தில் வாங்க முடிகிறது.நம்பவே முடியாத தள்ளுபடிகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் அள்ளித் தருகின்றன.
கடை வாடகை, சம்பளம் மாதிரி செலவுகள் இல்லாததால் சில்லறை விலையைவிட அநியாய மலிவுக்கு ஆன்லைனில் அவர்களால் தர முடிகிறது.ஆன்லைனில் டிவி, டிவிடி ப்ளேயர், ஏசி மாதிரியான எலெக்ட்ரானிக் சமாச்சாரங்களை இந்தியர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள்.
மொபைல் போன் விற்பனையும் அமேஸான் போன்ற தளங்களில் சக்கைப்போடு போடுகிறது. புத்தக விரும்பிகள், சல்லிசான விலையில் நல்ல புத்தகங்களை வாங்க முடிகிறது.எந்தப் பொருளையும் தொட்டுப் பார்த்து வாங்க முடியவில்லை மாதிரி சில பிரச்னைகளை தவிர்த்துப் பார்த்தால் ஆன்லைன் ஷாப்பிங் என்பது நடுத்தர மக்களுக்கு புதியதாகத் கிடைத்திருக்கும் வரம்.
ஆனால்-
நிறைய வகைகள். விலை மலிவு. பிராண்டட் பொருட்களை அலைச்சல் இன்றி ஈஸியாக தேடி எடுக்க முடிகிறது போன்ற சாதகங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உங்களை யாரோ எங்கிருந்தோ நேரில் கூட பார்க்காமல் ஏமாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் பொருள் வாங்கும் இணையத்தளம் எவ்வளவு தூரம் நம்பகமானது, பணம் செலுத்தி எத்தனை நாட்களில் பொருளை அனுப்புகிறார்கள் போன்றவற்றை எல்லாம் அறியாமல் மவுஸ் பட்டனை அமுக்கக்கூடாது.
ஒருவேளை உங்களுக்கு பார்சலாக வந்த பொருள் பழுதடைந்திருந்தால், அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உத்தரவாதம் இருக்கிறதா என்பதையெல்லாம் முன்பே தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும்.
சந்தேகிப்பது நல்லது
அநியாயத்துக்கு விலை மலிவு என்று விளம்பரப்படுத்தப்படும் பொருளை அவசரப்பட்டு வாங்கி விடாதீர்கள்.
உதாரணத்துக்கு ஐபோன் ஐநூறு ரூபாய் என்று கூவி கூவி அழைத்தால் அவசரப்பட்டு போய் 'க்ளிக்' செய்யாதீர்கள். அது உங்களுக்கு வைக்கப்பட்ட கண்ணியாக இருக்கலாம். நீங்கள் பணமெல்லாம் செலுத்திய பிறகு, அவன் பாட்டுக்கு அமரிக்கையாக 'அவுட் ஆஃப் ஸ்டாக்' என்று மெயில் அனுப்புவான்.
நம்முடைய பணத்தை திரும்பப் பெறுவதற்குள் தாவூ தீர்ந்துவிடும். அல்லது தேசப்பிதாவின் கணக்கில் எழுதிக்கொள்ள வேண்டியதுதான்.கிரெடிட் கார்ட் பயன்படுத்துங்கள்
ஆன்லைன் ஷாப்பிங்கை பொறுத்தவரை டெபிட் கார்டை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங்குக்கு மட்டுமென்றே தனியாக ஒரு கிரெடிட் கார்டை பயன்படுத்த முடிந்தால் நல்லது. இல்லையேல் paypal போன்ற சேவைகளை உபயோகியுங்கள்.
நம்பகமான கடைதானா?
உங்களுக்கு நன்கு தெரிந்த நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் பொருட்கள் வாங்குவது பாதுகாப்பானது. உதாரணத்துக்கு, உங்கள் நகரின் பெரிய மொபைல் போன் கடையில் வெப்சைட்டில் ஒரு போன் வாங்கி, அது பழுதானால் நேரில் போய் சரிசெய்துக் கொள்ள முடியும்.
ஊர் பேர் தெரியாத ஏதோ வெப்சைட்டில் பொருள் வாங்கிவிட்டு, ஆஃப்டர் சேல்ஸ் சர்வீசுக்கு அல்லாடிக் கொண்டிருக்க வேண்டாம்.உங்கள் நண்பர்களும், உறவினர்களும் அடிக்கடி பொருட்கள் வாங்கி திருப்தியை வெளிப்படுத்திய வெப்சைட்டுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஓர் ஆன்லைன் ஸ்டோரை பற்றி தெரியவில்லை,
ஆனால் அவர்கள் நல்ல விலையில் நீங்கள் விரும்பக்கூடிய பொருளை கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஸ்டோரை பற்றி மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்று லேசாக 'கூகுள்' செய்துப் பார்த்தாலே போதும்.
விதிமுறைகள் கவனம்
ஷாப்பிங் வெப்சைட்டுகள் தங்கள் விதிமுறைகளை ஒரு லிங்கில் ஓரமாக வைத்திருப்பார்கள். இதையெல்லாம் படிப்பானேன் என்று சோம்பல் படாமல், வேகமாக ஸ்க்ரோல் செய்து ஒருமுறை வாசித்து விடுங்கள். நுகர்வோருக்கு ஆப்பு அடிக்கக்கூடிய விதி ஏதேனும் இருக்கலாம். ஒருமுறை விற்ற பொருளை திரும்பப் பெற முடியாது மாதிரி வார்த்தைகள் ஏதேனும் தென்பட்டால், அந்த வெப்சைட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு குளோஸ் செய்யுங்கள்.
பாதுகாப்பான ஷாப்பிங்தானா?
கிரெடிட்கார்ட் எண் போன்றவற்றை டைப் செய்யும்போது அட்ரஸ் பாரை உற்று நோக்கவும். 'https' என்று ஆரம்பிக்காமல் 'http' என்று மட்டும் இருந்தால் அது டுபாக்கூர். இங்கே 's' for security என்று பொருள். https என்கிற பாதுகாப்பினை வழங்காத வெப்சைட்டுகளை சீண்டவேண்டாம்.
வெளியிடங்களில் குறிப்பாக பிரவுஸிங் சென்டர்களில் ஆன்லைன் ஷாப்பிங்கை தவிர்க்கவும். வீட்டிலோ, அலுவலகத்திலோ இருக்கும் உங்கள் கம்ப்யூட்டர் மூலமாக செய்வதே நல்லது.
நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் வைரஸ், மால்வேர் மாதிரி பிரச்சினைகள் இல்லாமல் அவை நல்ல ஆண்ட்டி வைரஸ் சாஃப்ட்வேர் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பது அவசியம்.
தள்ளுபடி
ஆன்லைன் சைட்டுகள் அறிவிக்கும் தள்ளுபடிகளை பெற, 'டிஸ்கவுண்ட் கூபன்' பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொருமுறை ஷாப்பிங் செய்யும்போதும் தள்ளுபடி இருக்கிறதா, இருந்தால் அதற்கு கூபன் எங்கே கிடைக்கும் என்று தெரிந்துக்கொண்டு காசை கொடுங்கள்.

No comments:
Post a Comment