தலைமை செயலக ஊழியர்கள் 'ஜீன்ஸ், டி ஷர்ட்' அணிய தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 30, 2019

தலைமை செயலக ஊழியர்கள் 'ஜீன்ஸ், டி ஷர்ட்' அணிய தடை

பீஹாரில் தலைமை செயலக ஊழியர்கள், 'ஜீன்ஸ், டி ஷர்ட்' போன்ற உடைகளை அணிந்து, அலுவலகத்துக்கு வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில், மாநில முதன்மை செயலர், மஹாதேவ் பிரசாத் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தலைமைச் செயலக ஊழியர்களும், அதிகாரிகளும், அலுவலக மரபுக்கு மாறான ஆடைகளை அணிந்து வருகின்றனர்.
இது, அலுவலக கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும், எதிராக உள்ளது


. அதனால், தலைமைச் செயலக ஊழியர்கள், அதிகாரிகள், அலுவலக கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வர வேணடும்.அலுவலகத்துக்கு, ஜீன்ஸ், டி ஷர்ட் போன்ற ஆடைகளை அணிந்து வரக் கூடாது.

நாகரிகமான, எளிமையான ஆடைகளை தான், ஊழியர்கள் அணிந்து வர வேணடும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment