வாட்ஸ் ஆப் பணபரிவர்த்தனை சேவை ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 4, 2019

வாட்ஸ் ஆப் பணபரிவர்த்தனை சேவை ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு

இந்தியாவில் பண பரிவர்த்தனை சேவையை துவக்க திட்டமிட்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், உள்நாட்டு சர்வரில் தகவல்களை சேமிக்க வேண்டும் என்ற விதியை பூர்த்தி செய்துள்ளதா என 6 வாரத்தில் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  பீம், பே-டிஎம், போன் ேப நிறுவனங்களை போல, வாட்ஸ்ஆப் நிறுவனம் மொபைல் மூலமான பண பரிவர்த்தனையை இந்தியாவில் செயல்படுத்த உள்ளது.


இதற்கான பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் இத்தகைய சேவையை அளிக்கும் நிறுவனங்கள், பண பரிவர்த்தனை விவரங்களை இந்தியாவில் உள்ள சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது.


 மேற்கண்ட விதியை பூர்த்தி செய்யாமல் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் பரிவர்த்தனை சேவைக்கு இந்தியாவில் அனுமதி தரக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியையும் பிரதிவாதியாக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 கடந்த வாரம் இதுகுறித்து கருத்து தெரிவித்த வாட்ஸ் அப் நிறுவனம், இந்த ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப் பேமன்ட் சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும். அதற்கான விதிகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டன என்று தெரிவித்திருந்தது.



 இதற்கிடையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு
 வந்தது.  அப்போது, வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிவர்த்தனை விவரங்களை இந்தியாவில் சேமித்து வைப்பது தொடர்பான விதிகளை பூர்த்தி செய்து விட்டதா என்பதை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 6 வாரங்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment